என் ஆத்துமா துதிக்குதே

  (Eb-Maj / 4/4 / T:97)

என் ஆத்துமா துதிக்குதே
என் முழு உள்ளம் உம்மை பாடுதே (2)
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி கண்ணீர் சிந்துதே (2)

ஆர்ப்பரி எந்தன் ஆத்துமாவே
ஸ்தோத்தரி உந்தன் தேவனையே
செலுத்திடு நன்றி பலிகளையே
உயர்த்திடு அவர் நாமத்தையே        - என் ஆத்துமா

என்னத்தை செலுத்துவேன் அவருக்காய்
எண்ணில் அடங்கா நன்மைகட்காய் (2)
இரட்சிப்பின் பாத்திரத்தோடு
இயேசுவே உம்மை தொழுதிடுவேன் (2)   - என் ஆத்துமா

கடற்கரை மணலிலும் அதிகமே
கர்த்தரின் நன்மைகள் அனைத்துமே (2)
நன்றி நிறைந்த முழுமனதோடு
நல்லவரே உம்மை துதித்திடுவேன் (2)       - என் ஆத்துமா

இம்மட்டும் எனக்கு உதவினீர்
இனிமேலும் எனக்கு உதவுவீர் (2)
எந்தன் வாழ்வின் நாட்களெல்லாம்
எபெனேசரே நன்றி சொல்லிடுவேன் (2)   - என் ஆத்துமா

 

En Aathuma Thuthikudhae

(Eb-Maj / 4/4 / T:97)

 

En aathuma thudhikudhae

En mulu ullam ummai padudhae (2)

Karthar seidha ubakarangalai

Enni enni kanneer sindhudhae (2)

 

Aarpari endhan aathumavae

Sthothari undhan Devanaiyae

Seluthidu nandri balikaliyae

Uyarthidu avar naamaththaiyae    - En aathuma

 

Ennaththai seluthuvaen avarukkaai

Ennil adangaa nanmaikatkai (2)

Ratchipin pathirathodu

Yesuvae ummai thozhudhiduvaen (2)     - En aathuma

 

Kadarkarai manalilum adhigamae

Kartharin nanmaigal anaithumae (2)

Nandri niraindha mulumanadhodu

Nallavarae ummai thudhithiduvaen (2)  - En aathuma

 

Immattum enaku udhavineer

Inimaelum enaku udhavuveer (2)

Endhan vaazhvin natkalellam

Ebinesarae nandri solliduvaen (2)  - En aathuma